திருக்குறள் 67
குறள் 67:
தந்தை மகற்காற்று நன்றி அவையத்துகலைஞர் மு.கருணாநிதி உரை:
முந்தி இருப்பச் செயல்.
தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.மு.வரதராசனார் உரை:
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.சாலமன் பாப்பையா உரை:
தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.பரிமேலழகர் உரை:
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;அவையத்து முந்தி இருப்பச் செயல் - கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல். (பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான் தந்தை கடன் கூறப்பட்டது.).மணக்குடவர் உரை:
தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம் அவையத்தின் கண்ணே முந்தியிருக்குமாறு கல்வி யுண்டாக்குதல்.திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தந்தை மகனுக்குச் செய்ய வேண்டிய நன்மை யாதென்றால் கற்றவர் நிறைந்த அவையில் அவரினும் சிறப்புற்று முற்பட்டிருக்குமாறு கல்வியுடையவனாகச் செய்தலாகும்.
No comments